இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில்,இளைய தளபதி விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் சர்க்கார் . ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த ‘துப்பாக்கி, கத்தி' ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டாகியிருப்பதால் இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகவுள்ளது.
நடிகர்.விஜயின் 62 வது படமான ' சர்கார்' திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், மேலும் ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளனராம். ‘இசைப் புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்தப் படத்தின் டீசரை ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனம் நேற்று மாலை 6: 45 மணி அளவில் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே ஏராளமான லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது.
டீசர் வெளியான 17 மணிநேரத்திலேயே சுமார் 1 கோடியே 30 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
0 Comments