இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். அதில் ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்(2452 ரன்கள்) என்ற சாதனையை நிகழ்த்தினார். விராட் கோலி 2450 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் 7 ரன்களும், முகமது நைம் 26 ரன்களும், அடுத்து களமிறங்கிய சவுமியா சர்கார் அதிரடியாக ரன் சேர்த்து 39 ரன்களும் எடுத்து வெளியேறினர். எதிர்முனையில் அதிரடி காட்டி வந்த முஷிபூர் ரஹிம் 41 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 60 (43) ரன்களும், கேப்டன் முகமதுல்லா 15 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் வங்கதேச அணி 19.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக முஷிபூர் ரஹிம் 60 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி முதல் போட்டியில் வென்று முன்னிலை வகிக்கிறது..
0 Comments