Tamil Sanjikai

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களின் ஆதரவு கடிதத்தையும் பாஜக தலைவர் அமித்ஷா குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். அப்போது, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

17-ஆவது மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வருகிற 30-ஆம் தேதி 2-ஆவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி பார்லிமென்ட் குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

0 Comments

Write A Comment