Tamil Sanjikai

மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே முடித்து கொள்ளுமாறு அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கொல்கத்தாவில் நேற்று பங்கேற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் வன்முறை வெடித்தது. அப்போது பாஜக தொண்டர்களுக்கும், கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது , மேற்கு வங்க மாநிலத்தின் போற்றுதலுக்குரிய தலைவர்களில் ஒருவரான ஈஸ்வர்சந்திர வித்யாசாகரின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது. இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே, அதாவது நாளை இரவு 10 மணிக்குள் முடித்து கொள்ளுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 19 -ஆம் தேதி, ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் வெள்ளிக்கிழமை (மே 17) மாலை 5 மணியுடன் முடிவடைய இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment