Tamil Sanjikai

இந்தோனேசியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவிலிருந்து திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று மதுரா தீவிற்கு புறப்பட்டது.

அந்த படகில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்நிலையில் அந்த படகு நேற்று சுமனெப் என்ற தீவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராவிதமாக அந்த படகு உடைந்து ஆற்றில் மூழ்கியது.

இதில் படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவலறிந்த பேரிடர் மேலாண்மை குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஆற்றில் மூழ்கிய 3 குழந்தைகள் உள்பட 17 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 39 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment