Tamil Sanjikai

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர்.

பாதுகாப்பு படையினரும் உடனடியாக சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே, நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

0 Comments

Write A Comment