Tamil Sanjikai

கிருஷ்ணகிரி, வரட்டன பள்ளியில் பெட்ரோலிய குழாய்கள் பதிப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான பொதுநல வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி முதல் விஜயவாடா வரை பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து பெட்ரோல் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது ஹிந்துஸ்தான் நிறுவனம். இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டன பள்ளி கிராமத்தில் 1.90கிமீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரட்டனபள்ளி கிராம விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், நிலங்களை கையகப்படுத்தினால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, விவசாயிகளின் பொதுநல மனு குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 Comments

Write A Comment