கொடநாடு விவகாரம் தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டது, சர்வாதிகாரத்தின் உச்சம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
சென்னை ஓட்டேரியில், திமுக சார்பில் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் விழாவில் கலந்து கொண்டார் கனிமொழி, விழா முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி , ஜெயலலிதா மரணம் தொடர்பான குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் பழனிசாமி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும், திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல் இந்த வழக்கை சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஹைட்ரோ கார்பன் தொடர்பான கேள்விக்கு, இனி பாஜக ஆட்சிக்கு வரப்போவதில்லை எனவும் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிச்சயம் நிறைவேறாது எனவும் கனிமொழி குறிப்பிட்டார்.
0 Comments