Tamil Sanjikai

முதல் அமைச்சர். எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தபடி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 70 இலட்சம் மாணவா்களுக்கு "ஸ்மார்ட் காா்டு" வழங்கப்படும் என தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

அதன்படி மாணவர்களுக்கான ‘ஸ்மார்ட் கார்டில்’ உள்ள ‘க்யூ ஆர் கோடு’ அல்லது ‘பார் கோடு’ வாயிலாக மாணவர் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் பெற முடியும்.

மேலும் இந்த ‘ஸ்மார்ட் கார்டு’ வாயிலாக பள்ளி நேரங்களில் பள்ளிக்கு வெளியில் இருக்கும் மாணவரையும், மாணவா் எந்த பள்ளியில் படிக்கிறார் என்பதையும் கண்டறிய இயலும். மேலும் மாணவா்கள் இடைநிற்றலைத் தடுக்க முடியும். மாணவர்களின் அடையாள அட்டை எண், பிறந்த தேதி, தந்தையின் பெயர், முழு முகவரி, பள்ளியின் பெயர், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்ட ஆண்டு, மாணவரின் புகைப்படம், ரத்தப்பிரிவு, கல்வித்தகவல் போன்ற விவரங்களும் இடம் பெறும். ரத்தப்பிரிவு சார்ந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால், அந்த மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு பெரிதும் உதவும்.

‘ஸ்மார்ட் கார்டு’ தயாரிக்கும் பணியை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

1 Comments

Write A Comment