Tamil Sanjikai

பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக கூறி ஆச்சி மிளகாய் பொடியை கேரளாவில் விற்பனை செய்ய கேரள அரசு தடைவிதித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஆச்சி மசாலா தயாரிப்புகள் கேரளா உட்பட இந்தியாவிலுள்ள அணைத்து மாநிலங்களிலும் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருச்சூரில் இந்த மசாலாப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி, கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடைபெற்ற ஆய்வில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளான இட்டியோன், புரபேனோபோஸ் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆச்சி மிளகாய் பொடியை கேரளாவில் விற்பனை செய்ய கேரள அரசு தடை விதித்துள்ளது.

0 Comments

Write A Comment