மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில் திடீரென முதல்வர் பெயரில் கல்வெட்டு வைப்பதாக எம்எல்ஏ அறிவித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு நிலவியது.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அதனை பார்வையிட வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் வாடிவாசல் அருகே காளை வெளியே வரும் பகுதியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரை கல்வெட்டில் பொறிக்க பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைக்கேட்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களும், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினரும் அதிர்ச்சி அடைந்தனர், மேலும் சட்டமன்ற உறிப்பினரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காவல்துறையினரை வரவழைத்து சமரசம் செய்ய முயற்சித்தார். எனினும், ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கோபமாக காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
0 Comments