Tamil Sanjikai

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,. ஒரு சில இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் கூறுகையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று குறைவாக இருக்கும். ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், 30-40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையம் சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.

0 Comments

Write A Comment