Tamil Sanjikai

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்துகொலை செய்தார். நெஞ்சை பதற செய்யும் இந்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூருவில் நிகழ்ந்தது. ராஜாஜி நகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்த ஜெய்குமார் ஜெயின் என்பவரின் மகள், 10 வது வகுப்பு படித்து வருகிறார். 18 வயது பிரவீன் என்பவருடன் பழகி வந்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த மகள், தனது காதலுடன் சேர்ந்து, தந்தையை 10 முறை கத்தியால் குத்தி, உடலுக்கு தீ வைத்து விட்டு, தப்பி ஓடி விட்டார். காதலுடன் இணைந்து தந்தையை கொலை செய்த மகள், இப்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறாள்.

0 Comments

Write A Comment