Tamil Sanjikai

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபனி புயல், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என்று ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது கடலின் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஃபனி புயலானது, மே மாதம் ஒன்றாம் தேதி முதல் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 910 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இப்புயல், சென்னையை நெருங்க மிக குறைந்த வாய்ப்பு உள்ளதாக , சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment