Tamil Sanjikai

கடந்த புதன்கிழமை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே உடனான ஒரு சந்திப்பில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக "உறுதியான நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்காவும், இந்தியாவும் கேட்டுக் கொண்டன.

அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த அடுத்த நாள் ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜெ.எம்.எம்) தலைவர் மசூத் அசார் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் உலகளாவிய பயங்கரவாதியாக நியமிக்கப்படுவதற்கு இந்தியாவின் முயற்சியை சீனா தடுத்து நிறுத்தியது குறுப்பிடதக்கது.

இந்த நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்ப்போ கூறியதாவது:-

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடந்த பிப்ரவரி 14 ந்தேதி இந்தியாவில் என்ன நடந்தது என்பதை நாங்கள் கண்டோம். தீவிரவாதிகளை வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தீவிரவாதம் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த முந்தைய அரசாங்கங்களும் எடுக்காத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என கூறினார்.

0 Comments

Write A Comment