Tamil Sanjikai

தனிநபர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று அறிவிப்பதற்கான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட மசோதா, கடந்த மாதம் 24-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2-ந் தேதி, மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இரு அவைகளின் ஒப்புதலை பெற்றதால், அந்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்ததையடுத்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பதுடன், பயங்கரவாதம் மூலம் திரட்டிய சொத்துகளை முடக்கவும், அவர்கள் பயணம் செய்ய தடை விதிக்கவும் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) அதிகாரம் அளிக்கப்படும்.

0 Comments

Write A Comment