நேபாளம் மற்றும் பூடான் நாட்டிற்கு செல்ல குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விசா இல்லாமல் ஆதார் அட்டையை மட்டும் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
நேபாளம், பூடான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வோருக்காக மத்திய அரசு சலுகையை காட்டியுள்ளது. அதன்படி 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், நேபாளம், பூடான் செல்வதற்கு விசா எடுக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், விசாவுக்கு பதிலாக தங்களது ஆதார் அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைசசகம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவை இதுவரை அடையாள அட்டையாக பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments