Tamil Sanjikai

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்திற்கு தள்ளிவிட்டு, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்சில் கோலி முதல் பந்திலேயே டக் ஆவுட் ஆனதால் அவரின் முதலிடம் பறிபோனது. ஆஷஸ் தொடரில் சதம் அடித்ததால் 904 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தை பிடித்து ஸ்மித் சாதனை படைத்துள்ளார். கோலி 903 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 878 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், 825 புள்ளிகளுடன் புஜாரா 4 மற்றும் 725 புள்ளிகளுடன் ரஹானே 7-ஆவது இடத்திலும் உள்ளனர்.

0 Comments

Write A Comment