Tamil Sanjikai

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிகளில் அதிக ரன்கள் குவித்து கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

இந்தியா-வங்காளதேசம் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள (பெரோஸ் ஷா கோட்லா) அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரராக களமிரங்கிய ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்(2452 ரன்கள்) என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் . விராட் கோலி 2450 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

0 Comments

Write A Comment