உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், வீட்டிற்கு செல்ல காசு இல்லாததால் காவல் உதவி எண் 100-ற்கு அழைத்து காவல்துறை வாகனத்தில் லிஃப்ட் கேட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில நேரங்களில் காவல் உதவி எண்களுக்கு வரும் சில அழைப்புகள் விசித்திரமான காரணங்களுக்காக இருக்கும். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், வீட்டிற்கு செல்ல தன்னிடம் காசு இல்லாத காரணத்தினாலும், காவல் வாகனத்தில் பயணிக்கவேண்டும் என்பதாலும் காவல் உதவி எண் 100-ற்கு அழைத்து, ஏதோ விபரீதம் நடந்தது போல் நாடகமாடியுள்ளார்.
இளைஞரின் அழைப்பை ஏற்று வந்த காவலர்கள், அந்த இளைஞரிடம் விசாரித்தபோது விபரீதம் ஏதும் நடக்கவில்லை என்றும், வீட்டிற்கு செல்ல தன்னிடம் காசு இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார். பின்னர், அந்த இளைஞனை அவர்களது காரில் ஏற்றிய போலீசார், அந்த இளைஞன் போதையில் உள்ளாரா என்பது போல விசாரித்துள்ளனர். அதற்கு, தான் ஒரு படித்த இளைஞன் என்றும் தன்னிடம் வீட்டிற்கு செல்ல காசு இல்லாத காரணத்தால் தான் அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது, சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
0 Comments