Tamil Sanjikai

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிய இருக்கிறது. அமெரிக்க அதிபரின் பதவி காலம் 4 ஆண்டுகள். இதனால் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது . அமெரிக்காவை பொறுத்த வரை அதிபர் தேர்தல் பணிகள் ஒரு ஆண்டு முன்பே தொடங்கிவிடும்.

அமெரிக்காவில் அதிபராக இருக்கும் ஒருவர் 2 முறை தேர்தலில் போட்டியிடலாம், அதன்படி குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார். ஜனநாயக கட்சியில் இருந்து டிரம்புக்கு எதிராக வேட்பாளர் நிறுத்தப்படுவார். அமெரிக்க அதிபர் தேர்தல் விதிகளின்படி ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய கட்சிக்குள்ளே தனித்தனியாக தேர்தல் நடைபெறும். உறுப்பினர்கள் ஓட்டுபோடுவார்கள். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் வேட்பாளராக முடியும்.

ஜனநாயக கட்சி சார்பில் 25-க்கும் மேற்பட்டவர்கள் தயாராகி வருகிறார்கள். சென்னை பெண் உள்ளிட்ட 2 இந்தியர்களும் இதற்கான களத்தில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் மிச்சேல் ஒபாமா, எலிசபெத் வாரன் ஆகிய பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் டிரம்ப் தோல்வி அடைவார் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் 47 சதவீத பேர் அவருக்கு எதிராக மனநிலையில் இருப்பதாகவும் தெரிகிறது .ஆக்சியோஸ் கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளரையும், மிச்சேல் ஒபாமா 16 புள்ளிகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளரையும் தோற்கடிப்பார் என்று தெரிவித்துள்ளது.

நியூயார்க் செனட்டர் கிறிஸ்டியன் கில்பிரான்ட் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்பை தோற்கடிப்பார் என்றும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தற்போதில் இருந்தது அமெரிக்கா அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது.

0 Comments

Write A Comment