Tamil Sanjikai

நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவன் கைது செய்து ,அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என தெரிய வந்துள்ளது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் உறுதி செய்தார். இந்த தாக்குதலை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொடூர தாக்குதலில் இந்திய வம்சாவளியினர், இந்தியர்களும் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் 9 பேரை காணவில்லை,” என குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் அதிகமான தகவல்களை பெற உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம், உறுதியாக தெரியாமல் எதையும் அறிவிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment