ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசு, 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபானி புயல், புனித நகரமான பூரி உட்பட பல்வேறு நகரங்களை, வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு, கடுமையான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
ஒடிசாவில் ஃபானி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
பெரியளவிலான இழப்பை எதிர்கொண்டுள்ள ஒடிசாவின் துயரத்தையும், அம்மாநிலத்தின் இழப்பையும் பகிர்ந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், ஒடிசா மாநிலத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
ஒடிசா மாநிலத்திற்கு தேவைப்படும் மற்ற உதவிகளையும் செய்வதற்கு, தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருக்கிறார்.
0 Comments