Tamil Sanjikai

வருடாவருடம் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டிகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல பெண்கள் கலந்து கொள்வார்கள். இம்முறை இந்த பட்டத்திற்கான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுமன் ராவ் என்ற 22 வயது இளம்பெண் பட்டத்தை தட்டிச் சென்றார். 2018ம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ், சுமன் ராவிற்கு கிரீடத்தினை சூட்டினார்.

தெலுங்கானாவை சேர்ந்த சஞ்சனா விஜ் என்பவர் இரண்டாம் இடம் பெற்றார். மேலும் நேற்றைய இறுதி போட்டியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைட்டட் பட்டத்தினையும், சட்டீஸ்கரைச் சேர்ந்த ஷிவானி என்பவர் மிஸ் கிராண்ட் இந்தியா பட்டங்களையும் வென்றனர்.

இந்த வருடம் தாய்லாந்து நாட்டில் நடைபெற இருக்கும் மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிக்கு போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்.

0 Comments

Write A Comment