Tamil Sanjikai

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் தனது முதல் ஆட்டத்திலேயே, தென் ஆப்பிரிக்கா அணியை, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது இந்திய அணி.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மாேதின. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் மட்டுமே எடுத்தது.

228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்யா துவங்கிய இந்திய அணி வீரர்கள் நிதானமாக ஆடினர். சிகர் தவான் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் ஏமாற்றினாலும், துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, நிதானமாக ஆடி சதம் அடித்தார். இறுதி வரை ஆட்டம் இழக்கமால் இருந்து, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். தோனி 46 பந்துகளில் 34 ரங்களும், கே.எல் ராகுல் 46 பந்துகளில் 26 ரங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ரோஹித் சர்மாவின், அவரின் அதிரடி ஆட்டத்தால், 47.3 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 230 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0 Comments

Write A Comment