இந்தியாவின் அதிநவீன விரைவு பதிலடி ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கவல்ல இந்த ஏவுகணையை இந்திய ராணுவத்துக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(DRDO) தயாரித்துள்ளது.
எந்த வானிலையிலும், எந்த நிலப்பரப்பிலும் இந்த ஏவுகணையை பயன்படுத்த முடியும். 25 முதல் 30 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடியது. விமான ரேடார்கள் செயலிழக்கச் செய்ய முடியாத அளவுக்கு மின்னணு தடுப்பு வசதிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் பலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், ஒரு வாகனத்தில் இருந்து இந்த ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இது, ஏற்கனவே 2 தடவை சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
0 Comments