Tamil Sanjikai

இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான், இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெறுவது வழக்கம். அதேபோல் சல்மான் கான் நடித்து தற்போது வரும் ‘பாரத்’ படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் படத்தில் சல்மான்கான் நடிக்கும் வித்தியாசமான தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் ஜூன் மாதம் 5-ந் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சல்மான்கானின் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

0 Comments

Write A Comment