நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன்பின் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வட சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியிலேயே நடைபெறுகிறது.
இந்நிலையில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு உள்ளன என்றும் வாக்கு எண்ணிக்கையில் மோசடி வேலைகள் நடந்துள்ளன என்றும் கூறி ராணிமேரி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
0 Comments