உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக விலகியுள்ளார்.
மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜடேஜா மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பீல்டிங் செய்தனர் .
புவனேஸ்வர் குமார் 3.4 ஓவர் வீசியபோது காயம் ஏற்பட்டதால் விலகினார். இதனால் அந்த ஓவரை வீச அழைக்கப்பட்ட விஜய் சங்கர், முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் வெளியேறியது இந்திய அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments