நாடு முழுமையாக தேங்கியுள்ள வழக்குகளை தீர்வு காணும் வகையில் இன்று மாநில அளவிலான லோக் அதலாத் நடைபெறகிறது. இதில் 2,50,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடவுள்ளது. நாடு முழுமையாக தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாநில அளவில் லோக் அதலாத்தும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய அளவில் நாடு முழுதும் மொக லோக் அதலாத் நடத்தபடுகின்றது.
தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக் குழு சார்பில் தமிழகம் முழுவதும் லோக் அதாலத் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும். அது இன்று நடைபெறுகின்றது. கிரிமினல் வழக்குகள், வங்கி காசோலை மோசடி, கடன் நிலுவை உள்ளிட்ட தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் சிவில் வழக்குகள் உள்ளிட்ட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடவுள்ளது.
ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் நிலுவையில் உள்ள 1,68,518 வழக்குகளும், நீதிமன்றத்திற்கு வராமல் நிலுவையில் உள்ள 79087 வழக்குகளும் என மொத்தம் 2,47,605 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடுகிறது. இதற்காக சென்னை உயர்நீதிமன்றம் 10 அமர்வுகள், உயர்நீதிமன்ற மதுரை கிளை 6 அமர்வுகள், மாவட்ட அளவிலும், தாலுகா அளவில் என மொத்தம் 468 அமர்வுகள் அமைத்து நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வு கான படவுள்ளது என மாநில சட்டபணிகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி நசீர் அஹமது தெரிவித்துள்ளார்.
0 Comments