Tamil Sanjikai

உத்தரப்பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை பாஜக பிரமுகர் துன்புறுத்தி விரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.

பாஜக பிரமுகர் முகமது மியா, சாலையில் நடந்து சென்ற ஒரு மாற்றுத்திறனாளியிடம், பேசிக் கொண்டிருந்த போது அவர் சமாஜவாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்குத்தான் தமது ஓட்டு என கூறினார்.

இதையடுத்து அவரை தொடர்ச்சியாக துன்புறுத்தி, அங்கிருந்து செல்லுமாறு பாஜக பிரமுகர் விரட்டினார்.

அவரது மிரட்டலுக்கு பணியாத மாற்றுத் திறனாளி தொடர்ந்து அகிலேஷ் யாதவுக்குத் தான் தமது ஓட்டு என கூச்சலிட்டுச் சென்றார்.அந்த மாற்று திறனாளி இளைஞரின் பெயர் முகேஷ் என்றும் அவர் சாம்பலிலுள்ள சந்த்ரௌசியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குடித்துவிட்டு பிரதமர் மோடியையும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் தவறாகப் பேசியதால்தான் அங்கிருந்து விரட்டியதாக பாஜக பிரமுகர் விளக்கமளித்துள்ளார்.

0 Comments

Write A Comment