Tamil Sanjikai

குஜராத் மாநிலம் சூரத் நகரில், சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை மாலை (நேற்று) வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீயால், ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 18 என்று அறிவிக்கப்பட்டது, கடைசியாக கிடைத்த தகவலின் படி இந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது .அதில் 10 பேர் மாணவர்கள்.

டேக்சிலா எனும் கட்டடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீ எரிந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான காட்சிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் இருந்து மாணவர்கள் குதிப்பது காட்டப்பட்டு வருகிறது.

இந்த தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்தை முதலில் பார்த்தவர்களில் ஒருவரான விஜய் மான்குகியா தனியார் செய்திநிறுவனம் ஒன்றில் பேசியபோது, இந்த தீ சம்பவம் மாலை சுமார் 4.30 மணிக்கு நடைபெற்றதாகவும், சூரத்தின் சார்தனா பகுதியில் இருக்கும் இந்த கட்டடத்தில் இருந்து புகை வெளிவருவதை தான் பார்த்த்தாகவும் கூறினார்.

இந்த தளத்தின் கூரை தெர்மாகோலால் உருவாக்கப்பட்டுள்ளதாக தோன்றும் நிலையில், அந்த தீ விரைவாக பரவியதாக அவர் தெரிவித்தார்.

தீ விரைவாக பரவிய நிலையில், முதலில் 4 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை வந்தடைந்ததாக அவர் தெரிவித்தார். பின்னர், அதிக தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த தீ விபத்து பற்றி மிகவும் கவலைப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி . சூரத் நகரில் நடந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment