Tamil Sanjikai

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் என நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ரயிலில் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் கஜா புயல் நிவாரணப் பொருட்களை கொண்டுச் செல்ல சரக்குக் கட்டணம் இல்லை என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் நிவாரணப் பொருட்களை கட்டணமின்றி கொண்டு செல்லலாம் என தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க, டெல்லியிலுள்ள தமிழ்நாடு பவன் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடும் என அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏர் இந்தியா விமானத்தில் எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது. டெல்லியை சேர்ந்தவர்கள் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்தால், தமிழ்நாடு அரசு இல்லத்தை அணுகுமாறும், மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த அளவு உதவிகளை அனைவரும் செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment