Tamil Sanjikai

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை மிக எளிதாக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

நாட்டங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் ஆடிய பாகிஸ்தான் 21.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது.

106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயில், ஹோப் களமிறங்கினார்கள். ஹோப் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஒரு பக்கம் கெயில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். டேரன் பிராவோ டக் -ஆவுட் ஆனார்.

இதன் பிறகு பூரான் களமிறங்கினார். இவரும், கெயிலும் அதிரடி காட்ட, கெயில் அரைசதம் அடித்து, அமீர் பந்துவீச்சில் அவுட்டானார். மேலும், உலகக்கோப்பையில் அதிக (40) சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார் கெயில்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கெயில் 34 பந்தில் 50 ரன்களும் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்), பூரான் 19 பாலில் 34 ரன்களும் ( பவுண்டர் 4, சிக்ஸர் 2) அடித்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் அமீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 4 விக்கெட்டுகளை சாய்த்த வெஸ்ட் இண்டீஸின் தாமஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

0 Comments

Write A Comment