பிறக்கும் போது மூளையின்றி பிறந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது மருத்துவ சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியான கம்ப்ரியாவைச் சேர்ந்த ராப் என்பவரின் மனைவி ஷெல்லி கடந்த 2013ம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்த போது, வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது குழந்தைக்கு மூளை இல்லாமல் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் அந்த, தம்பதி அதனை விரும்பவில்லை.
அந்தக் குழந்தை பிறக்கும்போது மூளைப் பகுதியில் 2 விழுக்காடு மட்டும் வளர்ச்சி இருந்தது தெரியவந்தது. நோவா வெல் என பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை பார்வையின்றி, பேசும் மற்றும் கேட்கும் திறனின்றி வளர்ந்தது. பின்னர், நோவாவை ஆஸ்திரேலிய மருத்துவர்களின் கண்காணிப்பில் பெற்றோர் ஒப்படைத்தனர்.
3 வயதுக்குப் பின் நோவாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சையால், நோவாவின் மூளை வளர்சி விகிதம் அதிகமானதுடன் அந்தச் சிறுவனுக்கு பார்வையும் , திரும்பக் கிடைத்தது. மேலும் பேசவும், எழுதவும் நோவாவிற்கு மருத்துவர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
இதற்கு முந்தைய காலகட்டத்தில் மூளையின்றி பிறந்த குழந்தைகள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு உள்ளாகவே இறந்து விட்ட நிலையில் நோவா 6 ஆண்டுகளைத் தாண்டி வாழ்வதால் நீண்ட காலம் உயிர்வாழ வைக்க முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
0 Comments