Tamil Sanjikai

இந்தியாவில் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் ஐபேட் ப்ரோ 2018 விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய வெளியீட்டு தேதியை ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மூலம் தெரியாவந்துள்ளது. மேலும் இரண்டு டேப்லெட் மாடல்களும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

2018 ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12.9-இன்ச் மாடல்கள் கடந்த அக்டோபர் 31-ம் தேதி, நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வு முடிந்ததும் இரண்டு ஐபேட் மாடல்களின் தொடக்க விலையை ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

ஐபேட் ப்ரோ 2018 சிறப்பம்சங்கள்:

- 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் எல்.சி.டி. ப்ரோமோஷன் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
- ஆப்பிள் ஏ12X பயோனிக் 7என்.எம். பிராசஸர்
- 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, ட்ரூ டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
- மேம்படுத்தப்பட்ட ஃபேஸ் ஐடி
- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- 10 மணி நேர பேட்டரி பேக்கப்

இந்தியாவில் 2018 ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12-இன்ச் மாடல்கள் 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 11-இன்ச் மாடல் இந்திய விலை ரூபாய் .71,900ல் தொடங்குகிறது. 12.9-இன்ச் மாடலின் இந்திய விலை ரூ.89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விலை ரூபாய் .10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட் ஃபோலியோ கேஸ் 11-இன்ச் மற்றும் 12-இன்ச் மாடல்கள் முறையே ரூபாய் .7,500 மற்றும் ரூபாய் .9,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ விலை முறையே ரூபாய் .15,900 மற்றும் ரூபாய் .17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment