Tamil Sanjikai

உலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் பர்கர் வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

எப்போதும் எளிமையை விரும்பும் இவர் அமெரிக்காவின் சிலிக்கன் வேலி பகுதியில் உள்ள டிக்ஸ் டிரைவ்-இன் எனும் உணவகத்தில் பர்கர், ஃப்ரைஸ் மற்றும் கோக் வாங்க வரிசையில் நின்றுக்கொண்டு இருந்தார்.

சிறிது நேரம் கழித்தே அங்கிருந்தவர்கள் பில்கேட்ஸை அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment