இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் பகல்-இரவு டெஸ்ட போட்டியை விளையாடவுள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். சவுரவ் கங்குலி, பிசிசிஐ தலைவர் பதவியை ஏற்ற உடனே டெஸ்ட் போட்டிகளை பகல் இரவு போட்டியாக நடத்தினால் ஆட்டத்தை காண ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என கூறி அதற்கான முயற்சிகளிலும் முழு வீச்சில் இறங்கினார். இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதி, அதற்கான சம்மதமும் பெற்றுள்ளார்.
இதையடுத்து நவம்பர் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
0 Comments