Tamil Sanjikai

ஜெஜெ டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்னணுக்கருவிகள் வாங்கியது தொடர்பாக அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, அந்நியச்செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக காணொலிக்காட்சி மூலம் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மலர்மதி முன்பு ஆஜரானார். இந்த வழக்கில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

சசிகலா மீது 4 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோடநாடு எஸ்டேட் வாங்கியதில் என்று அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சசிகலா வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சசிகலாவிடம் பிப்ரவரி 12-ம் தேதி அமலாக்கத்துறை குறுக்கு விசாரணை செய்யும். சசிகலா மீதான 4 வழக்குகளை 4 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Write A Comment