Tamil Sanjikai

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கி, பலர் இறந்துவரும் வேளையில், தற்போது பறவை காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி இருப்பது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள முதலிபாளையம் ஊராட்சி மாணிக்காபுரம்புதூரை சேர்ந்தவர் செல்வம் என்கிற முருகசாமி மெக்கானிக்கல் வேலை செய்து வந்தார். கடந்த 2-ஆம் தேதி முதல் முருகசாமிக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்து வந்தது. அதையடுத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் காய்ச்சலும், சளியும் அவருக்கு குணமாகவில்லை.

இதையடுத்து முருகசாமி, ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போதும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அங்கு அவருடைய ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தபோது அவர் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகசாமி இறந்தார். திருப்பூரில் மெக்கானிக் ஒருவர் பறவை காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Write A Comment