இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூன் என்ற 29 வயது இளைஞர், கண்தெரியாத தனது மாமியாருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று, நள்ளிரவு 3 மணியளவில் தனது வீட்டின் முன் பட்டாசுகளை வெடித்துள்ளார்.
சுமார் 5 நிமிடம் வரை பயங்கர சத்தத்துடன் நடந்த இந்த வாணவேடிக்கையால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கடும் கோபம் அடைந்து, இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி மார்வின் பே, குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் பட்டாசு வெடித்ததால், இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூனுக்கு, 3 வார கால சிறை தண்டனை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
0 Comments