தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான புஷ்பா. இவருக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
புஷ்பா கணவரை பிரிந்து ஒரு வருடமாக தாயுடன் வசித்து வந்த நிலையில், தாயுடன் சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தாயும் தன்னை திட்டியதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான புஷ்பா, நேற்றிரவு பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த புஷ்பாவை அருகிலிருந்தோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆபத்தான நிலையில் புஷ்பா கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
0 Comments