Tamil Sanjikai

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கடந்த 2002-ஆம் ஆண்டில் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கில் இருந்து, 2006-ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ள புத்தகங்களை திரும்ப வழங்க மறுத்ததோடு, அந்த புத்தகங்களை சட்ட நடைமுறைகளை பின்பற்றி பழ.நெடுமாறனின் புத்தகங்களை உடனடியாக அழிக்க காவல்துறைக்கு உத்தரவிடுவதாகவும் , பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

0 Comments

Write A Comment