ஜம்மு - காஷ்மீரில் ஏற்கனவே குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு அதை நீட்டித்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை கலைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. அங்கு தேர்தல் நடத்தி, புதிதாக மாநில அரசு அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், அமர்நாத் யாத்திரை முடிந்த பின்னர் தான் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்நிலையில், அங்கு நிலவும் தற்போதைய சூழல் கருதி, மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிப்பதாக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். எனவே, அந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த, மேலும் ஆறு மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments