அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்பைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அல் கிரீன் என்ற உறுப்பினர் முன்மொழிந்தார். பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களே அதிகம் உள்ளனர்.
முதலாவதாக வாக்களித்த சபாநாயகர் நான்சி பெலோசி தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார். இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக 332 வாக்குகளும், ஆதரவாக 95 வாக்குகள் மட்டுமே பதிவானதால் பதவிநீக்கத் தீர்மானம் தோல்வியுற்றது.
இந்திய அமெரிக்கரும் பிரதிநிதிகள் சபை உறுப்பினருமான பிரமீளா ஜெயபாலும் தீர்மானத்துக்கு எதிராகவே வாக்களித்தார். ஆளுங்கட்சியுடன் பல கருத்து மோதல்கள் இருந்த போதிலும் ஜனநாயகக் கட்சியினரில் பலர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
கடந்த தீர்மானத்தின் போது 66 வாக்குகளையே தான் முன் மொழிந்த தீர்மானம் பெற்றாலும், தற்போது 95 பேர் ஆதரவளித்திருப்பதாக அல் கிரீன் கூறியுள்ளார்.
0 Comments