ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தவறான தகவல் கொடுத்திருப்பதாக நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் ட்மல்லிகார்ஜூன கார்கே குற்றஞ்சாடியுள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் உண்மையில் தற்போது வரை ரஃபேல் தொடர்பான தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று கார்கே கூறினார்.
மேலும் இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தலைமை வழக்கறிஞர், தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ரஃபேல் கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்திற்கு தவறான தகவல் அளித்த மத்திய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கார்கே வலியறுத்தினார்.
0 Comments