பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறை ஒன்றில் நேற்று பயங்கர கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் பயங்கர கலவரமாக மாறியது. இதில் சுமார் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என சிறைத்துறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதில் 16 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறையின் சுவர் வழியாக வீசப்பட்டது. வன்முறையில் தீ வைக்கப்பட்டதில் தீயில் சிக்கி பெரும்பாலான கைதிகள் உயிரிழந்தனர். இந்த மோதலின் போது பணையக்கைதிகளாக இரு பாதுகாவலர்கள் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசில் நாட்டில் சிறைக் கலவரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த கலவரம் மிகவும் மோசமானது என்று செய்திகள் கூறுகின்றன. முன்னதாக, கடந்த மே மாதம் அமேசான் நகரிலுள்ள சிறையில் நடைபெற்ற கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments