Tamil Sanjikai

வாட்ஸ்ஆப் மூலமாக பரவிய வதந்தி ஒன்றை நம்பி, ஓய்வு பெறவுள்ள டிஜிபி ராஜேந்திரனிடம் ஆயிரக்கணக்கான காவலர்கள் மனு அளித்து வருகின்றனர்.

தமிழக டிஜிபி ராஜேந்திரன் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் வாட்ஸ்ஆப் மூலமாக காவலர்களுக்கு தகவல் ஒன்று பரவியுள்ளது.

அதில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் ஓய்வு பெற இருப்பதால் பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்று காவலர்களுக்கு நீண்ட நாட்களாக நிறைவேறாத குறைகள் ஏதாவது இருந்தால் மனுவாக நேரில் வந்து அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பி கடந்த ஒரு வாரமாக நூற்றுக்கணக்கான காவலர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

வாட்ஸ்ஆப்பில் பொய்யாக பரவிய செய்தி என்றாலும் டிஜிபி ராஜேந்திரன், காவலர்களை சந்தித்து மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அந்த மனுவை பரிந்துரை செய்து வருகிறார்.

0 Comments

Write A Comment