Tamil Sanjikai

இந்திய ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றுபெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்று கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தோ்வு செய்தார். ஆஸ்திரேலியா மண்ணில் தற்போது வரை இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இல்லை என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது, கட்டாயம் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம்கண்டது.

இதனை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 48.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து. இந்திய அணியின் சாஹல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில், 231 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம்கண்டது. ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி சோபிக்காத நிலையில், கோப்டன் விராத் கோலியும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிச்சர்ட்சனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் விராத் கோலி.

இந்நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சோ்த்து தடுமாறியது இந்திய அணி. 108 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனியுடன் ஜாதவ் இணைந்தார். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. ஆட்டத்தின் கடைசிவரை நின்று விளையாடிய ஜாதவ் 61 ரன்களும், மகேந்திர சிங் தோனி 87 ரன்களும் எடுத்து இருவரும் ஆட்டமிழக்கமால் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இதனையடுத்து இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 49.2 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்று கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

0 Comments

Write A Comment