Tamil Sanjikai

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி, அங்கு உள்ள பள்ளிகளின் வேலை நேரம் குறைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறவுள்ள அத்திவரதர் விழாவை காண, தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் மட்டும் 48 நாட்களுக்கு பள்ளிகளின் வேலை நேரம் குறைக்கப்பட உள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் பள்ளிகள் அனைத்தும், ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை, காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 வரை செயல்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment